... தொடர்புகளுக்கு secrett.affection@gmail.com ...

காம அஸ்திரங்கள்! பாகம்-48


நாகமலை பயணம் முடிந்தது அரண்மனைக்கு வந்த அம்பிகாதேவிக்கு கருணாகரன் தப்பிவிட்ட செய்தி இடிபோல இறங்கியது. அடுத்த ஒரு நாழிகையில் காஞ்சியின் அரண்மனை அல்லோகலோலப்பட்டது. ஏரிக்கரை முழுவதுமே வீரர்களை சல்லடை போட்டுச் சலித்தார்கள். அவன் நாகமலைக்கு சென்றிருக்ககூடும் என்று அம்பிகாதேவியால் முழுமையாக நம்ப முடியவில்லை. அப்படியே அவன் சென்றிருந்தால் கூட போகும் வழியில் சர்ப்பம் தீண்டி இறப்பான். அல்லது நாகர்களின் கண்ணில்பட்டு விஷ அம்புக்கு இரையாவான் என் நினைத்தவள் அவனைப் பற்றிய கவலையை விடுத்தாள்.

காஞ்சிமாநகரம் முழுவதும் போர் மேகங்கள் சூழ்ந்துகொண்டன. இரண்டே நாட்களில் நகரம் முழுவதும் படைகளின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டதால் யாரும் கோட்டையை விட்டு வெளியே செல்லவோ, உள்ளே வரவோ அனுமதிக்கப்படவில்லை. சோழநாட்டின் ஒற்றர்கள் யாவரும் வேட்டையாடப்பட்டார்கள். இன்பநாயகியின் மாளிகை விருந்தினர் யாருமில்லாமல் வெறிச்சோடிக்கிடந்தது.

ரஞ்சனா பல முறை கோட்டையைக் கடந்து வன்னான் துறைக்கு செல்ல முயன்று, முடியாமல் திரும்பிவிட்டாள். கருணாகரனின் கதியென்னவென்று அறியமுடியாவிட்டாலும், அவன் அம்பிகாதேவியின் கையில் சிக்கவில்லை என்பதால் சற்று நிம்மதியோடிருந்தாள். சதா போர் ஒத்திகையிலும், கோட்டையின் பாதுகாப்பிலுமே நேரத்தை செலவிட்டுக்கொண்டிருந்த காஞ்சனாவுக்கு கருணாகரனைப்பற்றி சிந்திக்க நேரமில்லை.[hr]

ருணாகரன் காஞ்சியிலிருந்து தப்பிய பத்தாம் நாள் சோழ மன்னர் தஞ்சைக்கோட்டையில் போர் முரசு கொட்டினார். இரண்டாயிரம் புரவி வீரர்களையும், ஐந்தாயிரம் காலாட்களையும் கொண்ட சோழப் படை புறப்பட்டுவிட்டதாக ஒற்றர்கள் காஞ்சிக்கு செய்தியனுப்பினார்கள். கருணாகரன் தப்பித்துவிட்ட பத்தாம் நாளே சோழன் போருக்கு புறப்பட்டுவிட்டதை எண்ணி எள்ளி நகைத்தாள் சாளுக்கிய மகாராணி அம்பிகாதேவி. அரண்மனைக்குள் வந்து போன அவனால் என்ன ரகசியத்தை கண்டறிந்திருக்க முடியும் என்று மட்டும் அவளுக்கு விளங்கவேயில்லை.

மீண்டும் அவன் கையில் சிக்கினால், கடும் காவலில் வைத்து மதிமயக்கி தினமும் காமகளி கொள்ளவேண்டும் என்று நினைத்தாளேயன்றி அவனை கொல்ல வேண்டும் என்ற எண்னம் மட்டும் அவளுக்கு உதிக்கவேயில்லை. அந்த அளவுக்கு அவன் ஆண்மை அம்பிகாதேவியை மதிமயங்க வைத்திருந்தது என்பதே உண்மை.

திட்டமிட்டபடி தஞ்சையிலிருந்து புறப்பட்ட ஆறாம் நாள் சோழ சேனைகள் காஞ்சியை முற்றுகையிட்டன. ஏரிக்கரை வன்னான் துறையில் சோழ சேனாதிபதி வந்திய தேவர் பாசறை அமைத்தார். படைகள் காஞ்சியை அடைந்ததும் நேரடியாக கோட்டையைத் தாக்கும் என்று எதிர்பார்த்திருந்த அம்பிகாதேவிக்கு இந்த முற்றுகை குழப்பத்தை தந்தது. சோழர்களை கோட்டைக்குள் நுழையவிட்டு இருபுறமும் நசுக்குவதே அவளின் வழக்கமான போர்முறை. இந்த முற்றுகையின் காரணத்தை ஆராய அன்றிரவு  மந்திராலோசனையைக் கூட்டினாள்.

சாளுக்கிய சேனாதிபதி நரசிம்மனும், புரவிபடை தலைவியான இளவரசி காஞ்சனா மற்றும் உபதளபதிகள் அனைவரும் அம்பிகாதேவியின் முகத்தையே பார்த்துக்கொடிருந்தார்கள்.

“ நரசிம்மரே. சோழர்களின் பலம் என்ன ? “ அம்பிகாதேவி மந்திராலோசனையை தொடங்கினாள்.

“ புரவி மற்றும் காலாட்படை இரண்டும் சேர்த்து சுமார் ஆறாயிரம் முதல் ஏழாயிரம் வரை இருக்கலாம் மகாராணி. கடந்த போர்களை விட இந்த முறை குறைவான படைகளே வந்திருக்கின்றன. பத்தாயிரம் வீரர்கள்கூட இல்லாமல் எந்த நம்பிக்கையில் சோழன் போருக்கு வந்திருக்கிறான் என்று விளங்கவில்லை. முட்டாள்கள்.! “ என்று கம்பீரமாகச் சொன்னான் நரசிம்மன்.

“ அப்படியானால் நமக்கு வெற்றி நிச்சயம் தானே “ அம்பிகாதேவி குறுநகையுடன் கூறினாள்.

“ மூன்று முறை தோல்வியடைந்தவர்கள் அடுத்த முறை இப்படி குறைவான வீரர்களுடன் வரமாட்டார்கள். மேலும் வழக்கத்திற்கு மாறாக படைகள் முற்றுகையிட்டிருக்கின்றன. சோழர்களிடம் வேறு ஏதோ திட்டமிருக்கவேண்டும் மகாராணி. இம்முறை அவர்களை குறைத்து எடைபோடக் கூடாது “ காஞ்சனாவின் குரல் எச்சரிக்கையுடன் ஒலிக்க,. அனைவரும் ஏககாலத்தில் அவளை பார்த்தார்கள்.

” நரசிம்மா.! இளவரசியின் கூற்றில் நியாயமிருக்கிறதல்லாவா “ அம்பிகாதேவி கேள்வியை வீசினாள்.

“ மகாராணி. சோழர்களிட,ம் எந்த திட்டமிருந்தாலும் கோட்டைக்குள் இருக்கும் பத்தாயிரம் வீரர்களை சமாளிக்கும் அளவுக்கு கூட படைபலமில்லை. இதிலே மகாராணியின் ரகசியபடைகள் வெளியிலிருந்து தாக்கினால் இம்முறை தஞ்சைக்கு செய்திசொல்ல நம் வீரர்களைத்தான் அனுப்பவேண்டும். இளவரசியார் வீன் கவலை கொள்ளவேண்டாம் “ என்றான் நரசிம்மன்.

மூன்று போர்களிலும் வெற்றியை பெற்றவனும், பரத கண்டத்தின் திறமையான சேனாதிபதிகளில் ஒருவனுமான நரசிம்மனின் கூற்றில் அம்பிகாதேவிக்கு நம்பிக்கையிருந்தது.

“ சேனாதிபதி கூறுவதும் சரிதானே காஞ்சனா.! நம்மை வீணாக குழப்பமடையச் செய்வதற்காகவும் சோழர்கள் முற்றுகையிட்டிருக்கலாம். எனவே, இன்னும் மூன்று நாட்கள் காத்திருக்கலாம். அப்படியும் அவர்கள் தாக்குதலை தொடங்காவிட்டால், கோட்டையை திறந்துகொண்டு சாளுக்கிய படை சோழர்கள் மீது பாயட்டும். “ என்று தீப்பொறிகளாக கக்கியவள் அத்தோடு மந்திராலோசனை நிறைவடைந்ததற்கு அறிகுறியாக ஆசனத்தை விட்டு எழுந்தாள்.

மற்றவர்கள் எந்த அச்சமுமின்றி கலைந்து செல்ல, காஞ்சனா மட்டும் தீவிர சிந்தனையிலிருந்தாள். அப்படியானால் இந்த படையில் கருணாகரன் கண்டிப்பாக இருக்கவேண்டும். அவன் தான் ஏதோ திட்டத்துடனேயே காய் நகர்த்துகிறான். அது என்னவாக இருக்கும்.! அரண்மனைக்குள் அவன் எதைக் கண்டுபிடித்தான்.! விடைதெரியாத கேள்விகளுடன் தன்னறைக்குச் சென்று பஞ்சனையில் விழுந்தாள்.

மறுநாள் காலை கோட்டை மதில் மீதிருந்து முற்றுகையை  பார்வையிட்டாள் அம்பிகாதேவி. புரவிப் படை முன்பகுதியில் நிறுத்தப்பட்டு காலாட்கள் பின்புறமிருந்தார்கள். கோட்டை கதவுகளை இடித்து திறந்ததும் அதிவேகமாக உள்புகவே இந்த அணிவகுப்பு என்பது எல்லோருக்கும் தெரிந்த விசயம். இருப்பினும் பின்புறமாக ரகசிய படை தாக்கினால் அதனை எதிர்க்க எந்த ஏற்பாடும் இல்லாமல் இருப்பது அவளுக்கும், நரசிம்மனுக்கும் சற்று வியப்பாகவே இருந்தது.

அம்பிகாதேவி ஒற்றர்களை அனுப்பி இதை தவிர வேறு படைகள் இருக்கின்றனவாவென்று கண்டறிய உத்தரவிட்டாள். அந்திசாயும் நேரத்தில் நரசிம்மன் அவளைக் கண்டான்.

“ மகாராணி, இருபது காத தூரத்திற்கு எந்த படை நடமாட்டமும் இல்லையென்று ஒற்றர்கள் செய்திகொண்டு வந்திருக்கிறார்கள். மேலும் சுற்றுப்புற கிராமங்களிலும் படை வீரர்கள் யாரும் தங்கியிருக்கவில்லை “ என்றான்.

இதைக்கேட்ட அம்பிகாதேவியும் நிம்மதியடைந்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தீர்மானித்துக்கொண்டாள். இரண்டு நாட்கள் முற்றுகை அதே நிலையில் நீடித்தது. காஞ்சனா அடிக்கடி கோட்டையின் காவற்கூடங்களுக்குச் சென்று கண்ணுக்கெட்டிய தூரம் வரை தன் காதலன் இருக்கின்றானா என்று நீண்ட நேரம் பார்த்துவிட்டு வருவதையே இரண்டு நாட்களும் வழக்கமாகக் கொண்டிருந்தாள். ரஞ்சனாவும் தன் மாளிகையின் உப்பரிகையில் நின்று சோழர்களின் படைகளையே அனுதினமும் கவனித்துக்கொண்டிருந்தாள்.

மூன்றாம் நாள் மாலை நந்தவனத்தையொட்டிய ஏரிக்கரையில் அமைக்கப்பட்டிருந்த வானளாவிய மூங்கில் கோபுரத்தில் சிவப்பு வண்ணக் கொடியேற்றப்பட்டது. நாகமலையில் காத்திருந்த நாகர்கள் அந்தக் கொடியை அடையாளம் கண்டுகொண்டு முரசுகளை கொட்டினார்கள். ஒவ்வொரு காத தூரத்துக்கும் மலைக்காடுகளில் அமைக்கப்படிருந்த முரசுகள் சப்தம் கேட்டதும் ஒவ்வொன்றாக ஒலிக்க அரை நாழிகை நேரத்துக்குள் நாகமலை பள்ளத்தாக்கில் பெரும் போர் முரசுகள் ஆக்ரோஷமாக ஒலித்தன.

இரவு முதல் ஜாமம் முடிந்ததும், ஐந்தாயிரம் வீரர்களை கொண்ட ரகசிய புரவிப்படை நாகமலையின் மேற்குப்பக்கமிருக்கும் சிறிய கனவாயை நோக்கி சீராக சென்றது. அதே நேரம் காஞ்சியில் காலை பொழுது புலர்வதற்கு முன், கோட்டையை திறந்துகொண்டு தாக்குதலை தொடங்க முழு ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்தன. ரகசிய படை மலைகளைக் கடந்து கனவாயை நெருங்கிக்கொண்டிருந்தன. கனவாயை அடுத்து பெரும் சமவெளி பிரதேசமும் அதையடுத்து மீண்டும் சிறு காட்டுப்பகுதியும் இருக்கும். அதைக் கடந்து தெற்கே திரும்பினால் நேரே காஞ்சியை அடையலாம்.

காஞ்சியில் சாளுக்கியர்கள் தாக்குதலை தொடங்கியதும் இரண்டு நாழிகைக்குள் ரகசிய படை காஞ்சியை அடைந்து பின்புறத்தில் தாக்குதலை தொடங்கும். இதனால் சோழர்படை பாக்குவெட்டியில் அகப்பட்ட பாக்கு போல இரண்டு பக்கமும் நசுக்கப்பட்டு பொழுது சாயும் முன்பே சின்னாபின்னமாகச் சிதறிவிடுவார்கள். இதுவே அம்பிகாதேவின் போர்த்திட்டம். இப்படித்தான் கடந்த மூன்று முறையும் சோழர்களை முறியடித்திருந்தாள் சாளுக்கிய மகாராணி.

முற்றுகையிட்ட நான்காம் நாள் அதிகாலையில், அமைதியாக இருந்த காஞ்சிக் கோட்டையில் பெரும் ஆரவாரம் கேட்டது. போர் முரசுகள் நகரமெங்கும் இடிபோல ஒலிக்க கோட்டையை திறந்துகொண்டு புரவி வீரர்கள் ஏரிக்கரையில் முற்றுகையிட்டிருந்த சோழர்களின் புரவிப்படையை நோக்கி நகர்ந்தார்கள்.

என்னேரமும்  தாக்குதலை எதிர்பார்த்துக் காத்திருந்த சோழசேனைகள் அரை நாழிகைக்குள் அணிவகுப்பை ஸ்திரமாக்கிக்கொண்டன. சாளுக்கியர்களின் நான்காயிரம் புரவி வீரர்களும் இரண்டாக பிரிந்து சோழ சேனையை வளைத்தால், சோழர்களின் புரவி படையும் இரண்டாக பிரியும். அப்போது காலாட்கள் நடு பகுதியிலிருக்கு காலாட்படையுடன் மோதி சூறையாடுவார்கள். எண்ணிக்கையில் அதிகமாக இருப்பதாலும் அடுத்த இரண்டு நாழிகைக்குள் ரகசிய படையும் தாக்கும் போது வெற்றி நிச்சயம் என்பது நரசிம்மனின் திட்டமாகும்.

அதன் படியே சாளுக்கிய புரவி வீரர்கள் அணிவகுக்க காலாட்கள் பின்புறத்தில் நின்றனர். சங்குகள் ஊதப்பட போர் வெகு உக்கிரமாக தொடங்கியது. காற்றிலும் கடுகிச்சென்ற சாளுக்கிய புரவிப்படை சட்டென்று இரு கூறாக பிரிந்து சோழர்களின் இரண்டு விலாப்பகுதிகளையும் நோக்கிச் செல்லவே, வந்திய தேவர் வாளை மூன்று முறை ஆகாயத்தை நோக்கிச் சுழற்ற காலாட்களை முழுவதுமாக மறைத்து நின்ற சோழர்களின் புரவி படை படுவேகமாக மைய பகுதியை நோக்கி இருபுறத்திலிருந்தும் நெருங்கியது. பிரிந்த சாளுக்கிய புரவிப்படை தந்த இடைவெளியில் எதிரேயிருந்த காலாட்களை நோக்கி சோழனின் புரவிப்படை அம்புபோல பாய்ந்தன.

புரவியும் புரவியும் மோதும் என்று எதிர்பார்த்த நரசிம்மனுக்கு போர் நேரெதிராக திரும்பினாலும் அது எந்த வித அதிர்ச்சியையும் தரவில்லை. இரு கூறாக பிரிந்த சாளுக்கிய புரவிப்படையின் ஒரு பகுதிக்கு நரசிம்மனும், மற்றொன்றுக்கு காஞ்சனாவும் தலைமை தாங்கினார்கள்.  வலது புறம் சென்ற காஞ்சனாவின் படை சோழர்களின் வேல்களை அனாயசமாக எதிர்கொண்டு தாக்கின. ஆறாயிரம் வீரர்களுடன் இரும்புச்சுவர் போல நின்றிருந்த சாளுக்கிய காலாட்படையை வெறும் இரண்டாயிரம் புரவிகளைக்கொண்டு உக்கிரமாகத் தாக்கினார் சோழ சேனாதிபதி வந்திய தேவர்.

காஞ்சனா வெகு வேகமாகவும் உக்கிரமாகவும் போரிட்டாள். அவளின் வாள் சென்ற இடமெல்லாம் சோழர்களின் தலை கூட்டம் கூட்டமாக உருண்டது. சோழர்களின் தாக்குதலில் இதுவரை காணாத வேகமும் உறுதியும் இருந்ததை காஞ்சனா சற்று நேரத்தில் புரிந்துகொண்டாள். காலாட்களை தாக்கும் சோழர்களின் புரவிப்படையில்தான் கருணாகரன் இருக்கவேண்டும். காதலியோடு மோத விருப்பமில்லாமல் அந்தப்பக்கம் சென்றுவிட்டாரோ.! என்று எண்ணினாள்.

இன்னும் ஒரு நாழிகையில் ரகசியப்படை தாக்க ஆரம்பித்ததும் போர் முடிவுக்கு வந்துவிடும் என்பதால் நரசிம்மன் அலட்சியமாகவே போரிட்டான். திடீரென்று ஏரியை அடுத்த காட்டுப்பகுதியில் புரவிகளின் குழம்படி தடதடவென கேட்க சோழர்களின் காலாட்படை சட்டென்று இரண்டாக பிளக்க ஆரம்பித்தது. வரும் ரகசிய படையை காலாட்களுக்கு நடுவில் புகவிட்டு போரிட எத்தனிக்கும் வந்திய தேவரின் திட்டத்தை கண்ட நரசிம்மன்  ”தொலைந்தான் சோழன்” என்று கொக்கரித்தான். காலாட்படை பிரிந்ததும் சோழர்களின் புரவிப்படையும் வேகமாக பின்வாங்கிபடியே இரண்டாக பிரிந்து இருபுறமும் தாக்கிக்கொண்டிருந்த சாளுக்கியர்களின் புரவிப்படையை நோக்கி பாய்ந்தன.

திடீரென்று சோழர்களின் புரவிப்படை பின் வாங்கியதின் காரணம் புரியாத நரசிம்மன், சாளுக்கிய ரகசிய புரவிபடை இரண்டு கூறாக பிரிந்து தாக்குவதற்கான சங்கினை ஊதச் சொன்னான். அதிவேகமாக வந்துகொண்டிருந்த அந்தப்படை நரசிம்மனின் உத்தரவுப்படி பிரியாமல் சோழர்கள் தந்த இடைவெளியில் சாளுக்கியர்களின் காலாட்படையை நோக்கிச் செல்ல அப்படையின் முன்னே  அம்பைப் போல பாய்ந்து  சென்ற சாம்பல் நிற புரவியில் உருவிய வாளுடன் அமர்ந்திருந்தான் மாவீரன் கருணாகர தேவன்.

நாகமலையிலிருந்து இரண்டு நாள் இடைவிடாத பயணத்தில் மலையையும் காட்டையும் கடந்து சாளுக்கியர்களின் எல்லையோரமாகவே வேலூரை நோக்கி மறைந்து மறைந்து பயணத்தை கருணாகரன் அடுத்த இரண்டு நாட்களில் வேலூர் கோட்டையை அடைந்தான். ரஞ்சனாவிடம் அனுப்பிய ஓலையில் கண்டிருந்தபடி சோழ மன்னர் மூவாயிரம் புரவி படையினரை சிறு சிறு குழுக்களாக யாரும் அறியாவண்னம் வேலூருக்கு அனுப்பிக்கொண்டிருந்தார். படைகள் நடமாட்டத்தை கண்கானிக்கும் யாராக இருந்தாலும் கண்ட இடத்திலேயே வெட்டிவிட ஆனையிருந்ததால் சாளுக்கிய ஒற்றர்களில் செய்தியறிந்த அனைவருகே விண்ணுலகம் போயிருந்தார்கள். இதனால் இந்த புரவிபடையினைக் குறித்து காஞ்சிக்கு எந்தச் செய்தியும் எட்டவில்லை.

மலைக்காட்டில் கிடைத்த பட்டுச்சீலையில் இருந்த தகவலின்படி கருணாகரன் தலைமையில் வேலூர் கோட்டையிலிருந்து புறப்பட்ட புரவிப் படை நேராக நாகமலையிலிருந்து அம்பிகாதேவியின் ரகசிய படை வெளியேறும் கனவாய் பகுதியை அடைந்து இருளில் மறைந்திருந்தது. கனவாய் வழியாக வெளியேறிய படைகளை கருணாகரன் சூழ்ந்துகொண்டு கடுமையாக தாக்கினான்.  எதிர்பாராத தாக்குதலால் ரகசிய படையில் பாதிக்கு மேல் அழிந்துபோயின. மிச்சமிருந்த வீரர்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள நாகமலைக்காடுகளில் சிதறி ஓடிவிட்டார்கள்.

அதன் பின்னரே கருணாகரன் காஞ்சியை நோக்கிச் சென்றான். படகோட்டம் என்றதுமே ரகசிய படைகள் நாகமலையிலோ அல்லது அதனை அடுத்த பகுதியிலோதான் இருக்க வேண்டும் என்று ஊகித்துவிட்ட கருணாகரன், காஞ்சியை சோழர்கள் தாக்கவேண்டிய விதங்கள் குறித்தும் ரஞ்சனாவின் மூலம் அனுப்பிய ஒலையில் குறிப்பிட்டிருந்ததால் வந்திய தேவர் அதே முறையிலேயே சோழபடைகளை நடத்தினார். எப்படியானாலும் ரகசிய படைகள் புறப்பட்டால் மட்டுமே சாளுக்கியர்கள் தாக்குவார்கள் என்று திட்டமான நம்பிக்கியிருந்ததால் கருணாகரனின் போர்த்திட்டமும் அதையொட்டியே அமைந்தது.

ங்கள் உதவிக்கு வரவேண்டிய படைகள் தங்களையே தாக்குவதால் சாளுக்கிய படைகள் பெரிதும் குழம்பின. அதே நேரம் கருணாகரனைக் கண்ட சோழ படைகள் ஆக்ரோஷமாக தாக்கின. இரண்டு நாழிகை நேரம் கடும் போர் நிகழ்ந்தது. ஒருபுறம் புரவிப்படையும் மறுபுறம் காலாட்படையும் தாக்கியதால் சாளுக்கியர்களின் இருபுற புரவிப்படைகளும் திக்குமுக்காடின.

வந்திய தேவருக்கும் நரசிம்மனுக்கும் இடையே நடந்த உக்கிரமான போரில் நரசிம்மன் தலை உருண்டது. சேனாதிபதி வீழ்ந்தாலும் இளவரசி காஞ்சனா போரை நிறுத்தாமல் கடுமையாக போராடினாள். கருணாகரனின் அதிவேக புரவிப்படை தாக்குதலில் சாளுக்கியர்களின் காலாட்படை பல இடங்களில் பிளக்கப்பட்டு அணிவகுப்பு முற்றிலும் களைந்துவிட சோழர்களின் காலாட்கள் அவர்களை சுற்றி வளைத்தனர்.

சாளுக்கிய சேனாதிபதி இறந்தும் போர் மும்முரமாக நடப்பதை கவனித்த கருணாகரன், இரண்டாம் பகுதியில் காஞ்சனாவே போரை நடத்துகிறாள் என்பதையறிந்து அவளிருக்குமிடம் நோக்கி புரவியைச் செலுத்தினான். பெண்ணால் இப்படி போரடமுடியுமா என்று சோழர்களும், வந்திய தேவரும் கூட பிரம்மித்துப் போகும் அளவுக்கு வாளாலும் வேலாலும் பயங்கரமாக தாக்கிக்கொண்டிருந்தாள்.

இருப்பினும் அணிவகுப்பு கலைந்து சிதறிவிட்ட சாளுக்கிய படைகளை ஒன்று சேரவிடாமல் சோழர்கள் வளைத்துவிட்டதால் மேற்கொண்டு போரை நடத்தமுடியும் என்று அவளுக்கு தோன்றவில்லை.

அதே நேரம் கருணாகரனும் அவளை வேகமாக நெருங்கிக்கொண்டிருந்தான். அவனைக் கண்டதும் காஞ்சனாவின் மனதில் காதல் தோன்றவில்லை. சாளுக்கியர்களின் வீழ்ச்சியே அவள் கண் முன்னால் நின்றது. இதனால் அவனை எதிர்கொள்ள தயாரானாள். உருவிய வாளுடன் அவளை நெருங்கிய கருணாகரன் அவள் பார்வையில் பட்டதுமே வாளை உறையிலிட்டுவிட்டு அவளருகில் சென்றான்.

உதிரத்தால் அபிஷேகம் செய்யப்பட்ட பத்ரகாளியைப் போல அவனை நெருங்கினாள் காஞ்சனா. தன்னை எதிர்க்காமல் அவன் வாளாவிருப்பதைக் கண்டதும் “பெண்களுக்கெதிராக கருணாகரன் வாளெடுக்க மாட்டான்’ என்று ஓடக்கரையில் அவன் சொன்னது நினைவுக்கு வரவே அவளின் வேகம் குறைந்தது.

“ போரில் ஆண் பெண் என்ற பேதம் உண்டா தேவரே “ புரவியிலிருந்தபடியே கருணாகரனை நோக்கி கர்ஜித்தாள்.

அவன் போர்க்களத்தை ஒரு முறை சுற்றிப்பார்த்தான். போர் முடிந்துவிட்டதற்கு அறிகுறியாக வந்திய தேவர் சங்குகளை ஊதச்செய்தார்.

“ என்னை கொல்லாமல் சோழர்கள் காஞ்சிக்குள் செல்ல முடியாது. உம் வாளை எடுங்கள் “ என்று கூச்சலிட்ட காஞ்சனாவின் இதயம் மெல்ல நடுங்கியது. கருணாகரன் புரவியிலிருந்து கீழே இறங்கி அவளிடம் சென்றான்.

“ என்னைக் கொன்றால் தான் உன் கோபம் தீருமென்றால், இதோ என் தலை எடுத்துக்கொள் காஞ்சனா “ என்று தலைவணங்கியவனை சோழ வீரர்கள் மட்டுமல்லாது சாளுக்கிய வீரர்களும் வியப்புடன் நோக்கினார்கள்.

அதற்குள் வந்திய தேவர் அங்கே வந்துவிட, நிலைமையை உணர்ந்து வீரர்களை விலகிச்செல்லுமாறு பணித்து விட்டு கோட்டையை நோக்கி முன்னேறினார். எதிரிகள் இருவரும் தனிமையில் விடப்பட்டார்கள். காஞ்சனா இதயம் ஒடிந்து போய் வாளை அவனிடம் நீட்டினாள். சாளுக்கியர்கள் தோற்று தான் கைதியாகிவிட்டதால் வாளை தன்னிடம் ஒப்படைக்கிறாள் என்று கருணாகரன் உணர்ந்துகொண்டான்.

சட்டென்று புரவியில் தாவியேறியவன் “ காஞ்சனா, வாள் உன்னிடமே இருக்கட்டும். உன்னை கைது செய்யும் அளவுக்கு கருணாகரன் கல்நெஞ்சன் அல்ல. வா போகலாம். “ என்று அவளின் புரவியையும் பிடித்துக்கொண்டு கோட்டையை நோக்கிச் சென்றான்.

0 Comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யவும். நன்றி!