... தொடர்புகளுக்கு secrett.affection@gmail.com ...

ரகசிய சேவைகள் (Secret Services) EP 01 - Rassy Camren


    வாணத்த பிச்சிகிட்டு மழை வெளுத்து வாங்கிட்டிருந்துச்சி. விண்டோ வழியா ரோட்ட வேடிக்க பாத்துகிட்டிருந்தேன். இருட்டி ரொம்ப நேரம் ஆயிடிச்சி. மழை நின்னா தான் வீட்டுக்கு போக முடியும்.  காலையிலேருந்து உக்காந்து உக்காந்து பின்னாடி கட்டி வராதது தான் பாக்கி. இருந்த ஒரே ஸ்டாஃப் ஆண்ட்ரியாவும் ஒரு மாசத்துக்கு முன்னாடியே வேலைய விட்டு போயிட்டா.
 

பிஸினஸ் ரொம்ப டல். சம்பளம் சரியா கொடுக்க முடியல. பசை இருக்குற இடத்துல ஒட்டிக்கிறவ. ஓடிட்டா. எதாச்சும் ரெண்டு, மூனு பெரிய கஸ்டமர் கிடைச்சாத்தான் ஆபீஸ் வாடகை கொடுக்க முடியும். இல்லாட்டி காலி பண்ணச் சொல்லிட்டான் ஓனர். மழை விடுறதுக்குள்ள என்னைப் பத்தி சொல்லிடுறேன். 

நான் விக்ரம். வயசு 26, வீட்டுக்கு ஒரே புள்ள. அப்பா போலீஸ் டி.எஸ்.பி. அம்மா ஃபேஷன் டிசைனர். என்னையும் ஐபிஎஸ் படிக்க வைக்க ரொம்ப முயற்சி பண்ணி கடைசில எம்.ஏ கிரிமினாலஜி தான் முடிஞ்சுது. கவர்மெண்ட் வேலைக்கு போகச்சொல்லி அப்பா தலைகீழ நின்னார். சொந்தமாத்தான் தொழில் பண்ணுவேன்னு இந்த 'சீக்ரெட் சர்வீசஸ்' டிடெக்டிவ் ஏஜென்சி ஆரம்பிச்சேன். ஒரு வருசம் ஆயிடிச்சி. எந்த முன்னேற்றமும் இல்ல. ஒரு வருசத்துல மூனு அசிஸ்ட்டண்ட் மாறிட்டாளுங்க. ஒருத்தியும் மூனு மாசத்துக்கு மேல இருக்கிறதில்ல. வீட்டுல பணம் வாங்கி வாடகையும் சம்பளமும் கொடுக்க முடியும். இருந்தாலும் சொந்த கால்ல தான் நிக்கனும்னு பிடிவாதமா இருந்து, சம்பளம் கொடுக்க முடியாம வரவ எல்லாம் ஒடிடுறாளுங்க.


அசிஸ்டண்ட் வேணும்னு விளம்பரம் கொடுத்து ஒரு மாசம் ஆகியும் ஒருத்தியும் சிக்கலை. என்னை பத்தி ஊருக்கே தெரிஞ்சிடுச்சின்னு நினைக்கிறேன். நாலஞ்சி பேர் வந்தாளுங்க. எதுவும் செட் ஆகலை. 7 மணி ஆயிடிச்சி. மழை தூறலா மாறிகிட்டிருக்க, ரோட்டுல ஆளுங்க இறங்க ஆரம்பிச்சிட்டாங்க. சட்டுன்னு கிளம்பனும்னு லைட் ஆஃப் பண்ணுற நேரம் பார்த்து யாரோ வர சத்தம் கேட்டது.


"உள்ள வரலாமா ஸார்"

 
கணீர்னு ஒரு குரல். 24-25 வயசுல ஒரு பொண்ணு அழகான சிரிச்ச முகத்தோட நின்னுகிட்டிருந்தா.

தொடர்ந்து படிக்க..

0 Comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யவும். நன்றி!