... தொடர்புகளுக்கு secrett.affection@gmail.com ...

அக்கினி பழங்கள் - பாகம் 1 - (ரசி கேம்ரென்) - (Link Updated-July 2023)

      
 
    செல்போனில் அலாரம் காதைக் கிழித்தது. மெல்லிய வெளிச்சத்தில் கண்களைக்கூட திறக்காமல் தலகானிக்கு கீழிருந்த செல்லை தடவி எடுத்து ஸ்னூஸ் மோடுக்கு தள்ளிவிட்டு, 'இன்னும் பத்து நிமிசம் தூங்கிட்டு எந்திரிக்கலாம்' என்று நினைத்துக்கொண்டு திரும்பவும் தூக்கத்துக்கு போனான். காலையில் எட்டு மணி வரைக்கும் தூங்குவது சென்னையில் மட்டுமல்ல, உலகத்தில் பெரும்பாலானவர்களுக்கு  நிறைவேறாத கனவுதான்.

செல்லின் அடுத்த சினுங்களில் மொத்த கனவையும் போர்வையோடு சேர்த்து உதறிவிட்டு சட்டென்று எழுந்தான். கோடைக்காலச் சூரியனும் சீக்கிரமாக டூட்டிக்கு வந்து ஜன்னல் வழியே எட்டிப் பார்க்க, சுறுசுறுப்பு அதிகமாகி, பக்கத்தில் தூங்கிக் கொண்டிருந்தவனை பொறாமையோடு பார்த்துவிட்டு, மூன்றுக்கு மூன்றடி பாத்ரூமில் மூச்சு முட்ட குளித்து, துணி மாற்றிப்  புறப்பட்டான்.

காரைக்குடியில் மெக்கானிக்கல் எஞ்சினீயரிங் முடிச்சிட்டு, வேலைக்காக அலைந்து கடைசியில் சென்னையில் அடைக்கலமாகி ஒன்றரை வருடம் ஓடிவிட்டது. ஏழ்மையிலும் பொறியியல் படிக்க வைத்த குடும்பத்தின் கஷ்டத்தை மேலும் அதிகமாக்க விரும்பாமல் கிடைத்த சேல்ஸ் மேன் வேலையை கட்டிக்கொண்டு வாழ்க்கையை ஓட்டும் இவன் பெயர் குணசேகரன்.  26 வயதில் இளைஞர் பலர் கடக்க வேண்டிய இன்பங்களில் சில துளிகளை மட்டுமே ருசித்துவிட்டு வாழ்க்கையில் வறுமையையும், வெறுமையையுமே கண்டு கொண்டிருந்தாலும் அதைப் பற்றி அதிகமாக கவலைப்பட்டதில்லை. போதும் என்ற மனமே வாழ்க்கையின் இன்ப துன்பத்தை நிர்ணயிக்கிறது. அந்த வகையில் குணா சந்தோசமாகவே இருந்தான்.
 
 

Download The Story Book Here