தூங்குறதுக்கு முன்னாடி, "ஒழுங்கா டிரஸ் பண்ணிட்டு வா"ன்னு வித்யாவுக்கு மெசேஜ் பண்ணிட்டு, மறு நாள் காலைல 9:00மணிக்கே ஆபீஸுக்கு போயிட்டான்.
வித்யா அடக்க ஒடுக்கமா சுடிதார்ல உக்காந்திருந்தாள்.
"என்ன கமாண்டோ. கலக்குறியாம்"னு சொல்லிகிட்டே விக்ரம் சீட்ல உக்காந்தான்.
வித்யா முகத்துல பயங்கர சந்தோசம்.
"நான் கேட்டதுக்கு ஒன்னுமே தெரியாதுன்னு சொன்னீங்க. எதுக்கு இந்த ட்ரைனிங்"
"எனக்கென்ன தெரியும். டி.எஸ்.பி மகனுக்கு செக்யூரிட்டி ரெடி பண்றாரோ என்னவோ?"
"செம்மயா இருந்துச்சி. இன்னைக்கு நீங்களும் வாங்க. ரெண்டு பேருக்கும் போட்டி வச்சிக்கலாம்"
"இந்த ஆட்டத்துக்கு நான் வரலை"ன்னு சிரிச்சான்.
"ம்ம்ம் சரியான ஆளுதான். அது இருக்கட்டும், இப்ப எங்க போறோம்?"
டிரஸ் ஒழுங்கா போட்டுட்டு வான்னு சொன்னதுல இருக்கிற அர்த்தம் கூட புரிஞ்சி வச்சிருக்கா. இவகிட்ட ரொம்ப ஜாக்கிரதையா இருக்கனும்னு நினைச்சான்.
"மாலினி வீட்டுக்கு போனும். கேரளாவுக்கு போக பிளான் போடனுமில்ல"
"ஓக்கே ஓக்கே"ன்னு நக்கலா சொன்னாள்.
சில சமயம் எதையும் கண்டுக்காத மாதிரி இருக்குறதுதான் நல்லதுன்னு அவன் பதிலுக்கு எதுவும் சொல்லல. வித்யா பைக் ஓட்ட அவன் பின்னாடி உக்காந்துகிட்டான்.
ரமேஷ் அவங்களை உள்ள அழைச்சிட்டு போனார். விக்ரம் வந்ததும் வீட்டை சுத்தி காட்டுறேன்னு சொல்லி அழைச்சிட்டு போயி கொஞ்சம் ரொமான்ஸ் பண்ணலாம்னு நினைச்சிகிட்டிருந்த மாலினி, வித்யாவ பாத்ததும் அப்செட் ஆயிட்டா. இருந்தாலும் எதையும் காட்டிக்காம கேசுவலாவே இருந்தாள்.